Sunday, 23 September 2012

Cable சங்கர்: சாட்டை

Cable சங்கர்: சாட்டை: Comment கேபிள் சங்கரின் சாட்டை திரைப்பட விமர்சனம்  பாரபட்சமற்ற பார்வையோடு இருந்தது. அதை படித்ததும் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலிடுகிறது. தரமான இந்த முயற்சிக்காக சாட்டை திரைப்பட குழுவிற்கு எனது வாழ்த்துகள்.
தி. குலசேகர்

Sunday, 15 July 2012

எனது புத்தகங்கள்


  1. ஒரு சிநேகிதிக்காக - அன்னம் பதிப்பகம்
  2. நேசங்களுடன் - அன்னம் பதிப்பகம்
  3. வானம்பாடி - அன்னம் பதிப்பகம்
  4. தி. குலசேகர் கதைகள் - சந்தியா பதிப்பகம்
  5. காதல் வந்த சாலை - திரைக்கதையின் நாவல் வடிவம்- சந்தியா பதிப்பகம்
  6. சாருலதா - நாவல்- சந்தியா பதிப்பகம்
  7. வசந்தம் முதல் வசந்தம் வரை - நாவல்- சந்தியா பதிப்பகம்
  8. சொர்க்கத்தின் குழந்தைகள் - நாவல் - சந்தியா பதிப்பகம்
  9. தன்னந்தனியே - நாவல்- சந்தியா பதிப்பகம்
  10. சமூகநீதிக்காவலர் டபிள்யு.பி.ஏ.சௌந்திரபாண்டியன் வாழ்க்கை வரலாறு
  11. வெண்மயமான இரவுகள் - நாவல்- ஆழி பதிப்பகம்
  12. பார்க்காமலே ஒரு காதல் - நாவல்- ஆழி பதிப்பகம்
  13. ஒரு திருவாளர் ஒரு திருமதி - நாவல்- ஆழி பதிப்பகம்
  14. ஒரு காதலின் வரலாறு - நாவல் - ஆழி பதிப்பகம்
  15. லோலா+எபி= உயிர்க்காதல் - நாவல் - ஆழி பதிப்பகம்
  16. சார்லி சாப்ளின் ஒரு  தரிசனம் - பிளாக்ஹோல் பதிப்பகம்

Saturday, 14 July 2012

காதல் மற்றும் இன்னபிற உறவுகள்... (காதல் கட்டுரை)


காதல் மற்றும் இன்னபிற உறவுகள்...


காதலுணர்வு சிலிர்த்தெழுகையில் ஜனிக்கும் பரவசத்துளி
மீபத்தில் ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ‘டாக் ஷோ‘ ஒன்றை பார்த்துக் கொண்டிருக் கையில், அதன் நடத்துனர் காதல் என்கிற தலைப்பில் பேச அழைத்திருந்த பங்கேற் பாளர்கள் தாங்கள்  கேட்டோ, பார்த்தோ, படித்தோ தெரிந்து வைத்திருந்த தகவலையும், கட்டண சேவையாக செல்பேசியில் பரிமாறப்படும் இதற்காகவே உருவாக்கப்படும்  துணுக்குச் செய்திகளையும் பிரதி எடுத்துத் தந்துகொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் நடத்துனர் சொல்லிக் கொடுத்ததை விடுத்து, சொந்த அனுபவங்களிலிருந்து தங்களின் உணர்வுகளை பதிவு செய்யலாமே என மெலிதான ஆதங்கத்தோடான வேண்டுகோள் விடுத்தார். எனினும் மக்கள் பிரதிநிதிகளாய் அங்கே அமர்த்தப்பட்டிருந்தவர்கள் சுயசிந்தனைகளின் ஆழத்தில் எழும் நிதர்சனங்களை நிஜத்துடன் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் போதாமல் சிரமப்பட்டதாகவே தோன்றியது.

இதனை உணர்ந்து கொள்ள அனுபவமோ, அனுபாவிப்போ நிகழ்கையில் அல்லது நிகழ்த்துகையில் சாத்தியப்படக்கூடும். அனுபாவித்தல் என்பது நிஜத்தின் பொதுமையை கற்பனையில் பாவித்துப் பார்த்து நிழலாய் அனுபவநிஜம் உணர்தல் என்று கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் இறுதி வரை நேசிக்கும் முதல் நபர் தன்னைத் தானே தான். அந்த விசயத்தில் குறை நிறைகளோடு உள்ளதுஉள்ளபடி நூறு சதவீதம் ஒவ்வொருவரும் தன்னைத்தானே நேசிக்க இயல்கிறது. அதனால் அந்த இயல்புகளோடு இருக்கும் ஒரு நபரை சந்தித்து, பழக நேர்கிறபோது அந்த உறவு  நட்போ, காதலோ இன்னபிற ஏதோவொரு வார்த்தையின் அடையாளத்துடன் ஜனனிக்கிறது.

இரண்டாவதாக நேசிக்கும் நபர் தான் விரும்பும் தன்னிடமில்லாத அல்லது தனக்குள் வெளிப்படஇயலாமல் ஒளிந்தேயிருக்கும் குணாம்சங்களை. அதாவது தான் இப்படி யெல்லாம் இருந்திருக்க வேண்டும் அல்லது இருக்கவேண்டும் என்கிற ஆசை அல்லது ஏக்கம் அல்லது பிரயாசையுடன் அகப்புற கற்பனையில் தம்மைத் தாமே புதிதாய் சிருஷ்டித்துக் கொண்டு அந்த ணீதீstக்ஷீணீநீt சித்தரிப்பின் சிலிர்ப்பை நேசித்துக் கொண்டிருப்போமே, அதன் சாயலை உடையவர்கள் மீதும் காதல் பிறப்பது இயல்பு. உதாரணமாய் ஒருவர் அமைதியின் சொரூபமாய் இருக்கும் சுபாவமுடையவராய் இருப்பார்.எனினும், உள்ளூர கலகலப்பாக துருதுருவென இருக்கவேண்டும் என்கிற அந்தரங்க ஏக்கமுடையவராய் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு வெளிப்படையாய், கலகலப்பாய், துள்ளலாய் பேசும் எதிர்பாலினர் மீது மையல் துளிர்ப்பதென்பது இயற்கை.

தன்னை ஒத்த இன்னொரு பிரதியாகவோ அல்லது தான் எப்படியிருக்கவேண்டும் என்கிற உள்முகவேட்கையோடு ஒத்திருக்கும் பிரதியாகவோ எதிர்பாலினத்தினரில் உணரும் வேளை அது பிரசன்னிக்கலாம்.

அதற்கான முக்கிய காரணம் எதிர்பார்ப்பின்மை. நாம் நம்மிடம் மட்டுமேனும் நிச்சயமாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதனால் இந்த நேசிப்பு சாசுவதமானதாகிறது. பறவைகள் கொள்ளும் உறவுகளில் எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. தாய் பறவையோ, தந்தை பறவையோ தன்னுடைய குஞ்சுகளை வளர்த்து சுயமாக இயங்கும் தகுதியினை ஏற்படுத்திக் கொடுத்ததும், எதையும் எதிர்பார்க்காமல் அதன் போக்கில் சுயமாய் இயங்க விட்டுவிடுகின்றன. அதன் பெற்றோர் அதற்கு எதை கற்றுத் தந்து, எப்படி நடத்தினார்களோ அதன்படியே இதுவும் செயல்பட எத்தனிக்கிறது. இனி உன் பாடு. உன் துணையை, உன் குடும்பத்தை, உன் ராஜ்யத்தை உன் இஷ்டப்படி உருவாக்கி பரிபாலணம் செய்து கொள்ள வேண்டியது உன் சமத்து என்று நாகரீகமாய் விலகிக் கொள்கின்றன. அந்த உறவில் எதிர்பார்ப்பென்பதில்லை. எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், தான் செய்கிற கடமையையே பலனாக பாவிக்கும் பக்குவப்பட்ட மனோபாவத்தின் வெளிப்பாடு அது. ரொம்ப எளிமையான, இயல்பான வழிமுறை.

எந்த உறவானாலும் காதல் உட்பட இந்த எதிர்பார்ப்பின்மை இருக்கிறபட்சம் அந்த உறவு நாள்பட நாள்பட செரிவும், ஆழமும் கொள்ளுமே தவிர தேய்வு பற்றி அறிவதில்லை.

எதிர்பார்ப்பேயில்லாத உறவில் சிக்கல் வர வாய்ப்பில்லை என்பது நிரூபணமான விதி.
உதாரணமாய் காதலனிடமோ, காதலியிடமோ, மகனிடமோ, மகளிடமோ, பெற்றோர் களிடமோ, நண்பர்களிடமோ, அக்கம்பக்கத்தினரிடமோ, உடன் பணிபுரிபவர்களிடமோ எதையும் எதிர்பார்க்காதபோது, அவர்களின் தன்னிச்சையான தீர்மானங்களோ, செயல்பாடுகளோ எப்போதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. அதனால் எந்தவித எரிச்சலும் தோன்ற வாய்ப்பில்லை. அப்படியிருக்க நம்மிடமிருந்து காயப்படுத்தும் எதிர்வினைகள் உற்பத்தியாக வாய்ப்பில்லை. அதனால் உறவுகளில் சேதாரமேற்படுவதுமில்லை.

இந்த எதிர்பார்ப்பற்ற நிலையின் பக்குவம், தன்னிடம் இழப்பதற்கு எதுவுமேயில்லை.. பெறுவதற்கு மட்டுமேஇருக்கின்றன.. அவை பொருளாகவோ, அறிவாகவோ, இனிப்பான, கசப்பான, இனிப்பும் கசப்புமான அனுபவங்களாகவோ தான், இதன் தொடர்ச்சி நீளும் என்கிற மனோநிலை வசப்படும்போது நிகழும்.

எதிர்பார்ப்பற்றதன்மை ஏமாற்றத்தை அகராதியிலிருந்து அகற்றி விடுகிறது.  அதனால் கோபம், பொறாமை, உணர்ச்சித் தடுமாற்றத்தில் தன்னிலைச் சரிவு,நிர்பந்தித்தல் போன்ற  லாகிரி வஸ்துகளும் அவசியப்படாமல் போய்விடுகின்றன.

எதிர்பார்ப்பற்றதன்மை என்பதை நாம் நம்மிடம் மட்டும் தான் கைக்கொள்கிறோம். பறவைகள் தங்களின் குஞ்சுகளிடமோ, விலங்கினங்கள் தங்கள் குட்டிகளிடமோ எதையும் எதிர்பார்ப்பதில்லை. பெரும்பாலான மனிதர்களும் தங்களின் குழந்தைகளிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதற்கான முக்கியகாரணம் அவர்கள் தங்களின் பிரதியாக இருப்பதால், தாங்களாகவே உருவகித்துக் கொள்ள இயலும் இயற்கையின் இயல்பே. அதற்கடுத்தபடியாய் உணர்வின் உன்னத உச்சநிலை கொண்டிருக்கும் காதல் முதலான உறவுநிலைகளின் சாஸ்வதத்தில் இந்தத் தன்மையை உணரஇயலும்.

இந்த எதிர்பார்ப்பற்ற தன்மை நம்மிடம் இருக்கிறதென்றால் நாம் காதலுக்கோ, நட்பிற்கோ இன்னபிற உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான தகுதியோடிருக்கிறோம் என்றாகும் வேளையில், இதே எதிர்பார்ப்பற்ற தன்மை நாம் உறவேற்படுத்திக்கொள்ள விளைபவரிடமுமிருக்கிறதா என்பதைக் கொண்டு அவரின் அந்த உறவின் அப்பழுக்கில்லா தன்மையின் அளவீட்டினை அறிந்துகொள்ள இயலும்.

இந்த எதிர்பார்ப்பற்றதன்மை என்பது உறவின் உன்னத தகுதியாகிறது. அதற்கடுத்த தட்டில் வைத்துப் பார்க்கக்கூடிய அளவிலான தகுதி என்று யதார்த்தத்தில் பார்க்கையில், நேர்மையான வியாபார உறவு  என்று சொல்லலாம். இந்த விசயம் சாத்தியப்படும் பட்சத்திலும் உறவுகளின் சிதிலம் மட்டுப்படுகிறது.

இந்த உறவில் எதிர்பார்ப்பிருக்கும் மிகவும் நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கும். தான் ஒரு விசயத்தில் எத்தனை சதவீதம் உதவி அதாவது பொருளாகவோ, அறிவாகவோ, ஒத்தாசையாகவோ, முக்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் இன்னபிற இதற்கிணையான இத்யாதிகள் பெற்றுக் கொண்டோமோ, அதே அளவு அல்லது அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் மேற்கூறிய ஏதோ ஒரு வடிவில் அதனை உதவி பெற்றுக் கொண்ட நபருக்கு திருப்பிச் செலுத்திவிடுதல் என்கிற சுபாவமும் இந்த உறவினை நடைமுறையில் தக்கவைத்துக்கொள்ளும் ஸ்திரம் கொண்டவையாக்குகிறது.

அவரவர் காதலை அவரவர் தான் கண்டு எடுத்தாக வேண்டும் என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அவர் உள்ளே உள்ளதை அமைதியாக உட்கார்ந்து கவனித்து கண்டுபிடித்து கண்டடைய சொல்கிறார். சொல்லாமல் புரியாதது சொல்லியா புரியப் போகிறது என்கிறார் லா.ச.ராமமிர்தம்.

காதல் போன்ற புனிதமான உணர்வுகளை விளக்குதல் கடந்து  சுயசிந்தனையின் அடிவேர் பயணித்து  அந்த அற்புத கணத்தின் (absolute moment) துல்லிய குவிமையம் வசம்கொண்டு பரவசிக்கையில் முழுமையாய் புரிதல் என்பது இயல்பாய் வசம்கொள்கிறது என்றே சொல்கிறது எனதான தேடல்.
 *
                               

Wednesday, 27 June 2012

ஒரு இலக்கியவாதியும் திரைக்கலைஞனும்

இன்று முதன்முதலாக நண்பர் டிஸ்கவரி புக்பேலஸ்-வேடியப்பன் பிளாக் பற்றிய அறிமுகம் தந்து என்னை அதில் எழுதுவதற்கு வேண்டிய தகவல் தந்திருக்கிறார். இனி தொடர்நது எனது பதிவுகள் இதில் இடம்பெற்று உடனே உங்கள் மனதிலும் இடம்பிடிக்கும் என்கிற உத்திரவாதம் இந்த கடிதத்தில் தருவதில் மகிழ்ச்சி நண்பர்கள் நண்பிகளே...